
தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த டாப்ஸி தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸி அண்மையில் மும்பையில் நடைபெற்ற ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது சிவப்பு நிற கவர்ச்சியான உடையுடன் லட்சுமி உருவம் பொறித்த ஒரு பிரம்மாண்டமான நெக்லஸை அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோவை தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட டாப்ஸி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த நகையை கண்டு நான் அசந்து விட்டேன்.
தஞ்சாவூரின் பாரம்பரிய ரக நகை இது. இது என்னை மிகவும் கவர்ந்தது என்ற பதிவிட்டு இருந்தார். இது தொடர்பான வீடியோவை டாப்சி மற்றும் வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில் கவர்ச்சி உடையில் லட்சுமி உருவம் பறித்த நெக்லஸை அணிந்து இந்து கடவுள்களை டாப்ஸி அவமதித்துவிட்டார் என அவர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தது. சனாதன தர்மத்தை சீர்குலைக்கும் விதமாக டாப்ஸி நடந்து கொண்டதாக கூறி மகாராஷ்டிரா மாநிலம் இந்தூர் பாஜக எம்எல்ஏவின் மாலினியின் மகன் ஏக்லவ்யா கவுர் சத்ரி புரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இந்த விவகாரம் பாலிவுட் சினிமாவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#MonawwarFaruquiArrest: Sharing three part videos of Faruqui's conversation with @BJP4MP MLA @GaurMalini's son Eklavya Singh Gaur, before the show.
In videos @munawar0018 is trying to clarify his stand and tendering apology if the jokes hurted him.#ComediansArrest@newsclickin pic.twitter.com/IpWFQoZhmF
— काश/if Kakvi (@KashifKakvi) January 3, 2021