
இன்று கர்நாடகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த திமுகவின் சரவணன் வழக்கறிஞர், இந்த விஷயம் முழுதாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருக்கக்கூடியவர்கள் காங்கிரஸ் தண்ணீர் திறந்து விடால் ? காங்கிரசும் – திமுகவும் கூட்டணியில் இருக்கிறார்கள். அதனால் தண்ணீர் திறந்து விட்டார்கள் என அரசியலாக்கி, நாங்கள் போராட்டம் நடத்துவேம் என்று பாஜக அங்கு அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறது.

வாழ்வாதார பிரச்சனையை அரசியலாக்குவதற்கு முக்கியமான காரணம் பாஜக. அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு அப்போதே முக்கியமான முடிவு எடுத்தது, உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றத்தை அணுகி எல்லாத்தையும் சொல்லி, தமிழகம் காவிரி போர்டுக்கு போகலாம், அவர்களின் அறிவுறுத்தலின் படி செயல்படலாம் என சுப்ரீம் கோர்ட் சொன்னார்கள்.
கர்நாடகா குறிப்பிட்ட அளவு தண்ணீரை நமக்கு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இப்போது இந்த உத்தரவை மீறி இவர்கள் செயல் பட்டார்கள் என்றால் ? நாம் மீண்டும் உச்சநீதிமன்றம் சொல்லலாம். ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டியது இருக்கும்.
இதனை பாஜக அங்கு மிகப்பெரிய அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் திறந்து விட்டால் குற்றச்சாட்டுகளை வைப்பது, தண்ணீர் திறந்து விட்டீர்கள் என்றால் ? போராட்டம் நடத்துவேன் என சொல்லுகின்றது பாஜக. நாம் நம் உரிமையை கேட்கிறோம். அதற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பாஜக. இனிமே அரசியல் ரீதியான தீர்வு என்பது இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று தான் தோன்றியது.
இப்போதும் தண்ணீர் முடியாது கொடுக்க முடியாதுன்னு சொன்னாங்கனா… உச்ச நீதிமன்றத்தை நாடுவதே சிறந்தது. கர்நாடகத்திடம் தானமாக கேட்கவில்லை. நமக்கு என்ன உரிமையோ… இதுவரை உச்ச நீதிமன்றம் என்ன கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறதோ, அந்த அளவை தான் கேட்கிறோம். அவர்களிடம் கொஞ்சம் நீர் இருக்கு, அதிகமான நீர் இருக்கு, எல்லா நீரையும் கணக்கில் எடுத்து தான். இந்த காலகட்டத்தில் இவ்வளவு நீரை கொடுக்க வேண்டும் என்று, நமக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நம்முடைய உரிமையை… சட்டபூர்வமாக கேட்கிறோம் என தெரிவித்தார்.