என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,  கர்மவீரர் காமராஜர் ஐயா 12 அணை கட்டினார். கால்வாயாக வெட்டி தள்ளினார்… கிராமம் கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தார்… அதன்பிறகு தமிழகத்தில் விவசாயிகளுக்கு யாரும் யாரும் நிற்கவில்லை. இன்றைக்கு இந்தியாவிலே கர்மவீரர் காமராஜர் ஐயாவிற்கு பிறகு விவசாயிகளோடு ஒரு மனிதன் நிற்கிறார் என்றால்,

அது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மட்டும்தான்,  விவசாயம் செழிக்க வேண்டும் என விவசாயிகள் பக்கம் நிற்கிறார்கள். எதற்காக குண்டாஸ் சட்டத்தை பற்றி மனச்சநல்லூரில் பேசுகிறோம் என்றால்,  பேசாத பெருமக்கள் ஓன்று திரண்டு பாரதிய ஜனதா கட்சியின்  பக்கம் நின்று, விவசாயிகளை  காப்பாற்றுவதற்கு….

விவசாயம் காப்பாற்றப்படுவதற்காக….  குறிப்பாக இளைஞர்களுக்கு…. படிப்பிற்கு ஏற்ற வேலை, வேலைக்கேற்ற ஊழியம் கிடைப்பதற்கு….   பாரதிய ஜனதா கட்சி 2026 இல் ஆட்சிக்கு வரவேண்டும்.  நீங்க அந்த வாய்ப்பு கொடுக்க வேண்டும்.  தமிழ்நாட்டின் உடைய அரசியலை நீங்கள் மாற்றி காட்ட வேண்டும் என தெரிவித்தார்.