
பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தனது ட்விட்டர் X தளத்தில், அ.தி.மு.கவை சார்ந்த திரு.ஜெயக்குமார்,திரு.C.V. சண்முகம் மற்றும் திரு.செல்லூர் கே.ராஜூ போன்றவர்கள் தொடர்ந்து நமது @BJP4TamilNadu தலைவர் திரு @annamalai_k Ex-IPS அவர்களை பொதுவழியில் அவமரியாதையாக பேசிவருவது வன்மையாக கண்டிக்கதக்கது.
மக்காளல் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் அரசியல் முதிர்ச்சி இன்றி, மூன்றாம் தர மேடை போச்சாளர்கள் போல அநாகரீகமாக பேசுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க வினர் கொண்ட கொள்கையில் ஒரு போதும் சமரசம் செய்திட மாட்டோம்.
மக்களின் நலனுக்காகவே பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியே தவிர 2024 பாராளுமன்ற மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அல்ல. வரும் காலங்களிலும் மத்தியில் அ.தி.மு.க கூட்டணி இன்றி பா.ஜ.க தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்கிற அறியாமையின்றி பேசுகிறார்கள். மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை அ.தி.மு.கவினர் தொடர்ந்து இழிவாக பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் அவர்களது பாணியில் தக்க பதிலடி கொடுப்போம்.
https://twitter.com/KaruppuMBJP/status/1703785062649712884