ட்விட்டர் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு நீளம், மஞ்சள் போன்ற குறியீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த பக்கங்களுக்கு கூடுதல் சலுகை கொடுக்க மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறு சிறு விதிமீறல்களால் குறியீடுகள் பறிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்தியாவில் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக்கை நீக்கியது ட்விட்டர் நிறுவனம். ப்ரீமியம் சந்தா செலுத்துபவர்களுக்கு மட்டுமே ப்ளூ டிக் சேவை கிடைக்கும் என ட்விட்டர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இந்திய முக்கிய புள்ளிகள் பலரின் ப்ளூ டிக் மார்க் பறிபோகியுள்ளது. இந்த பட்டியலில், முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரியங்கா காந்தி போன்ற அரசியல் பிரபலங்களும் அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஆலியா பட் உள்ளிட்ட பிரபல நடிகர்களும் உள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் ப்ளூ டிக்கை பறிகொடுத்தனர்.