
மும்பையின் புனேவில் சமீபத்தில் 17 வயது சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதியதில் இரு ஐடி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த சிறுவனை காப்பாற்ற குடும்பமே பண பலத்தை உபயோகப்படுத்தியது அம்பலமானது. இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது அது போன்று மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது பாஜக கூட்டணியில் இருக்கும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா குழுவிலுள்ள முக்கிய தலைவர் ராஜேஷ் ஷா. இவருக்கு மிஹிர் சாம் (24) என்ற மகன் இருக்கிறார்.
இந்த வாலிபர் இன்று அதிகாலை மது போதையில் bmw காரினை ஓட்டி சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு தம்பதி மீது கார் அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் காவிரி நாக்வா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கார் மோதிய வேகத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு அந்த பெண் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய கணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தை ஏற்படுத்திய இளைஞர் காருடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் அவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள்.