
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான பம்பாய் திரைப்படம் மெகா ஹிட் ஆனது. இந்த படத்தில் அரவிந்த்சாமி ஹீரோவாகவும் மனிஷா கொய்ராலா ஹீரோயினாகவும் நடித்திருந்தார். அதன் பிறகு நாசர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பம்பாய் படம் குறித்து சமீபத்திய பேட்டியில் நடிகர் விக்ரம் பேசியுள்ளார். அதாவது பம்பாய் திரைப்படத்தில் நடிக்க முதலில் நடிகர் விக்ரமை தான் மணிரத்தினம் அணுகியுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் புதிய மன்னர்கள் திரைப்படத்தில் விக்ரம் நடித்து வந்தார். இதற்காக அவர் தாடி மீசை வளர்த்து வந்த நிலையில் மணிரத்தினம் பம்பாய் படத்திற்காக தாடி மற்றும் மீசையை சேவ் செய்யுமாறு கூறியுள்ளார். அது முடியாது என்று கூறி படத்தில் இருந்து நடிகர் விக்ரம் விலகிவிட்டார்.
அவருக்கு மணிரத்தினம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது கனவாக இருந்த நிலையில் அந்த வாய்ப்பு கைநழுவி போனதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டாராம். அந்த படத்தை இழந்ததை நினைத்து கிட்டத்தட்ட 2 மாதங்களாக காலையில் தூங்கி எழுந்தவுடன் அழுவாராம். நடிகர் விக்ரம் மறுத்ததால் அரவிந்த்சாமிக்கு பட வாய்ப்பு சென்றது. இதன் காரணமாக நடிகர் விக்ரம் மணிரத்தின படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று சபதம் போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு ராவணன் திரைப்படத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேலும் இதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய திரைப்படங்களிலும் விக்ரம் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்துள்ளார்.