கோவையில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2-ம் நாள் பூத் கமிட்டி கருத்தரங்கத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, இந்த கருத்தரங்கம் வெறும் ஓட்டுக்காக மட்டுமல்ல என்று நேற்று கூறினேன். ஏனென்றால் நம்முடைய TVK கட்சி அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்டது அல்ல.

சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது. அதேபோன்று இதனால் மக்களுக்கு ஒரு நன்மை நடக்கின்றது என்றால் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போக நாங்கள் தயார். நம்முடைய கட்சி ஆட்சி அமைக்கும் போது அந்த ஆட்சி சுத்தமான ஆட்சியாக இருக்கும். நமக்கான வெற்றியை சாத்தியமாக்க பூத் கமிட்டி தான் முதுகெலும்பே என்று அவர் கூறினார்.