செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அரசை விமர்சனம் பண்ணா கேஸ்.  எங்க IT விங் எத்தனை பேரு மேல கேஸ்…   பத்திரிகையாளர்கள் எத்தனை பேரு  மேல கேஸ். எல்லாரு மேலையும் கேஸ்.உப்பு திண்ணவன், தண்ணி குடிப்பான். தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும். அலிபாபாவும் 40 திருடர்களும் என சொல்லுற மாதிரி, இப்போ அலிபாபாவும்  38 திருடர்களும். அந்த மாதிரி தான் இன்னைக்கு பயங்கரமான கொள்ளை அடிக்க படுது.  இன்னைக்கு காலையில் பாத்தீங்களா….   நல்ல செய்தி.

ED அனேக இடங்களில் போய் ரைடு அடிச்சு,   மணல் மாபியாவை எல்லாம் புடிச்சு டைட் பண்றாங்க. இதெல்லாம் அடிக்கடி பண்ணா….  அரசாங்க கருவூலத்துக்கு பணம் வரும். இயற்கை வளம் சூறையாடப்படாத  நிலை இருக்கும். அதனால இது ஒரு நல்ல விஷயம். கோர்ட்டில் இருக்கு பாலாஜி விஷயம். கழகத்தின் சார்பில் டாக்டர் ஜெ. ஜெயவர்தன EX எம்.பி மனு போட்டு உயர்நீதிமன்றம் ஒரு கொட்டு பலமா வைக்குது.

தார்மீக அடிப்படையில செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு  சரியானது அல்ல என இவ்வளவு சொல்லியும் கூட,  செவிடன் காது கூட கேட்கும் போல இருக்கு. ஆனால் இவுங்க என்ன மாதிரி? ரெண்டு காதும் அவுட்டா ? என்னனு தெரியல…  மொத்த ஸ்பீக்கர் அவுட்டு என நினைக்கிறேன்… தெரியாதது போல அப்படியே இருந்துகிட்டா… எப்படி? வெட்கி  தலை குனிய வேண்டிய விஷயம்.  நீதிமன்ற கொட்டு வைத்தும் கூட இன்னும் நீக்காமல்  இருக்கிறதுக்கு..  எப்படிப்பட்ட ? ஒரு ஊழல்வாதியை காப்பாற்றும் அளவிற்கு ஒரு ஊழல் அரசு தான்  என அவர்களே வெளியப்படுத்துகின்றார்கள் என தெரிவித்தார்.