சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கும்பல் ஒன்று அவர்களை நோட்டமிட்டு இளம் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தா ஆண் நண்பரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதனை அடுத்து அந்த கும்பல் இளம்பெண்ணை மிரட்டி அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்து தப்பித்து வெளியே வந்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.