
சத்தீஸ்கார் மாநிலத்தில் ரிசலி பகுதியில் வீர் சிங், புரன் ஷகு(14) என்று சிறுவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ரிசலி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ரதார்கள். அப்பொழுது அந்த தண்டவாளத்தில் ரயில் வந்துள்ளது. இதனை கவனிக்காத சிறுவர்கள் தொடர்ந்து மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அதிவேகமாக வந்த ரயில் அந்த சிறுவர்கள் மீதும் மோதியது. இதனால் அந்த 2 சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.