
கோவையில் கௌதம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அனைத்திந்திய பெருமன்றத்தின் கோவை மாவட்ட தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட சாலை விபத்தில் இவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கௌதம்குமார் மூளைச்சாவு அடைந்தார். இதன் காரணமாக அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.