தர்ஷன் சிறை சலுகை விவகாரம்: 7 பேர் சஸ்பெண்ட்

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் தர்ஷன் சிறையில் சலுகைகள் பெற்ற விவகாரத்தில் கர்நாடக அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன், ஒரு ரவுடியுடன் அமர்ந்து சிகரெட் பிடிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிவில், தர்ஷன் சிறையில் சலுகைகள் பெற்றதற்கு காரணமாக இருந்த 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தர்ஷனுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்து, சிறை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.