
சீருடை பணியாளர் தேர்வாணையம் தொடர்பாக தன்னுடைய பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக பேரவையில் வேல்முருகன் கூச்சலிட்டார். இதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சில நேரங்களில் அதிக பிரசங்கிதனமாக வேல்முருகன் செயல்படுவது வேதனை அளிக்கிறது. இடத்தை விட்டு எழுந்து வந்து கூச்சல் போடுவது முறை அல்ல.
ஒருமையில் பேசியது, அமைச்சர்களை கை நீட்டி பேசியது ஆகியவற்றை குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது, வேல்முருகன் இதுபோல் இனி நடந்து கொள்ளக் கூடாது. இந்த ஒரு முறை மன்னிக்கிறோம். சட்டப்பேரவையில் வேல்முருகன் பேசியதை ஏற்க முடியாது. அவர் தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.