
மதிமுக கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போது துரை வைகோவின் பதவி விலகலை அவர்கள் ஏற்கவில்லை. அதாவது மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் காரில் இருந்தா கட்சிக்கொடி உள்ளிட்ட சின்னங்களையும் அகற்றினார்.
அதாவது மல்லை சத்யாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவர் கட்சி பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது அவருடைய ராஜினாமா ஈர்க்கப்படுமா இல்லையா என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் அவருடைய ராஜினாமாவை கட்சி ஏற்காததோடு மொத்தம் ஒன்பது தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கூட மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ என்று குறிப்பிட்டதோடு தீர்மானத்தில் கூட அப்படியே குறிப்பிடப்பட்டுள்ளதால் அவருடைய ராஜினாமா ஏற்கப்படவில்லை எனவும் அவர் இனி கட்சி பதவியில் நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.