தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகருக்கு ஏராளமானவர் செல்வார்கள். இதன் காரணமாக ஏற்கனவே அந்த மாவட்டத்திற்கு 2 மாதங்கள் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதாவது வெளி மாநில வாகனங்கள் அந்த மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாது.

இந்நிலையில் மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை போன்றவற்றை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய 3 தினங்களும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்றும் கள்ளச் சந்தையில் மதுபானங்களை விற்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.