
சென்னை மாவட்டம் கிண்டியில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் கே.டி சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவான் உள்ளிட்ட ஏழு மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் விருப்பத்தை ஏற்று தொகுதியில் மறு சீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழுவின் அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் 3 மணி நேரத்திற்கு மேலாக நடந்த கூட்டம் சற்று முன் நிறைவடைந்தது.