கோவையில் அண்ணாமலை தோல்வியை கொண்டாடிய சிலர் பயங்கர செயல்களில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது. அண்ணாமலை புகைப்படத்துடன் இழுத்து வரப்பட்ட ஆடு ஒன்றை நடுரோட்டில் வைத்து வெட்டுகின்றனர் அந்த மர்ம நபர்கள். இந்த வீடியோவை பாஜக நிர்வாகி அமர் பிரசாத் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் முரண்பாடு களுக்காக இப்படியான செயல்களில் ஈடுபடுவது தவறு என்றும் கண்டன குரல்கள் எழுகின்றன.