
செங்கல்பட்டு மாவட்டம் அருகே கார் மீது கனரக லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிங்கப்பெருமாள் கோவில் திருத்தேரி சிக்னல் அருகே நின்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதியதில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..