அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதனை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் கபட நாடகம் ஆடும் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம். பெஞ்சல் புயலின் போது மக்களின் அடிப்படை தேவைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என கூறி தீர்மானம்.

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் விலைவாசி உயர்வு உள்ளது என தீர்மானம். சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் அதிக வரி விதிப்பு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம். மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம்.

திமுக அரசு பார்முலா 4 கார் பந்தயம், பேனா நினைவுச்சின்னம் போன்றவற்றிற்காக நிதியை வீணடிப்பதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம். குடிமராத்து திட்டத்தை செயல்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம். கோதாவரி, காவிரி பரம்பிக்குளம், ஆழியாறு, பாண்டியாறு புன்னம்புழா திட்டங்களை தொடங்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம். இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை சரி செய்து தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.

திமுக அரசு இஸ்லாமிய சிறை கைதிகளை வெளியே கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம். தமிழ்நாட்டின் நிதி பகிர்வை மத்திய அரசு பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம். 2026 ஆம் ஆண்டில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்குவோம் என வலியுறுத்தி தீர்மானம் என மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 2523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் ஆயிரம் பேரும் கலந்து கொண்டுள்ளனர்.