
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநரின் ஒப்புதலை அடுக்கு ஓரிரு நாட்களில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.