
இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சமீபத்தில் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு செபி 5 வருடங்கள் தடை விதித்து உத்தரவிட்டது. அதாவது நிறுவனத்தின் விதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றசாட்டின் பெயரில் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகளுக்கு 6 மாதங்கள் வரை தடை விதிக்கப்பட்டது. அதோடு 25 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோலுக்கு செபி ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது RHFL நிறுவனத்தில் முறைகேடு செய்ததாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசா கேப்பிட்டல் பார்ட்னர்களுக்கு 20 கோடியும், அக்யூரா ப்ரோடக்ஷன் நிறுவனத்திற்கு 20 கோடியும் விதிகளை மீறிய அவர் கடன் வழங்க ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்னதாக அந்த நிறுவனத்தின் சிஇஓவுக்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.