திருநெல்வேலியில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் அலங்கார் திரையரங்கம் அமைந்துள்ளது. இந்த திரையரங்கின் வளாகத்திற்குள் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் கொண்டு பேசியதில் யாருக்கும் காயமும் சேதமும் ஏற்படவில்லை. இந்த திரையரங்கில் அமரன் மற்றும் கங்குவா ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அமரன் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் படம் ரிலீஸ் ஆனபோது கூட கமல்ஹாசன் உருவ பொம்மையை எரித்து பிரச்சினை செய்தனர். இந்த நிலையில் தற்போது தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இருவர் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் சிசிடிவி கேமராவின் அடிப்படையில் அவர்களை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.