
தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் சமீபத்தில் வருவாய் துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமுதா ஐஏஎஸ் முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வருவாய்த்துறை செயலாளராக இருக்கும் அவருக்கு முதல்வரின் முகவரி திட்டத்துறை அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.