
அமெரிக்க நாட்டின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுள்ளார். அவருடன் துணை அதிபராக ஜே டி வான்ஸ் பதவி ஏற்றுக்கொண்டார். அமெரிக்க நாட்டின் அதிபராக இரண்டாவது முறை டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் அமெரிக்காவிற்கு இனி பொற்காலம் தொடங்கி விட்டதாக பெருமிதம் தெரிவித்தார். இந்நிலையில் இனி அமெரிக்காவில் ஆண் பெண் என்ற இரு பாலினம் மட்டும்தான் அங்கீகரிக்கப்படும் என்று தற்போது அதிபராக பதவி ஏற்றவுடன் டிரப்ப் அறிவித்துள்ளார். அதன்படி சிறார் பாலினமாற்று அறுவை சிகிச்சைக்கு தடை, ராணுவத்தில் மாற்று பாலினத்தவர்களுக்கு தடை ஆகிய உத்தரவுகளில் கையெழுத்து போட்டுள்ளார்.
மேலும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்தும் அமெரிக்கா வெளியேறுவதாக இரண்டாவது முறையாக அதிபர பொறுப்பு ஏற்றதும் மீண்டும் கையெழுத்திட்டுள்ளார். அவருடைய முதல் ஆட்சி காலத்திலும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அவர் வெளியேறிய நிலையில் ஜோ பைடன் பதவி ஏற்றதும் இந்த ஒப்பந்தத்தில் இணைவதாக மீண்டும் கையெழுத்திட்டார். தற்போது ட்ரம்பு பதவியேற்றதும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக கையெழுத்துட்டுள்ளார்.