அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி உள்பட சிலருக்கு வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு என முந்தைய அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.

அமைச்சர் பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்ககை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.