
திமுக கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் திமுக எம்.பி. இந்நிலையில் வேலூர் காந்திநகர் பகுதியில் உள்ள எம் பி கதிர் ஆனந்த் வீட்டில் தற்போது அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் எந்த காரணத்திற்காக சோதனை நடத்துகிறார்கள் என்ற விவரம் வெளிவரவில்லை.
இதே போன்று திமுக கட்சியின் நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனின் 2 வீடுகளிலும் அமலாக்க துறையினர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சோதனை முடிந்த பிறகு தான் அதற்கான காரணம் பற்றி தெரியவரும் என்று கூறப்படுகிறது.