திமுக கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். இவருக்கு தற்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதாவது சென்னை செல்வதற்காக காட்பாடியிலிருந்து வந்தே பாரத் ரயிலில் செல்வதற்காக அமைச்சர் துரைமுருகன் வந்தபோது திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதன் காரணமாக தற்போது வேலூரில் உள்ள நறுவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அமைச்சர் துரைமுருகன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.