சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகா விஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது புகார்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரும் மகாவிஷ்ணு மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளனர். அதன் பிறகு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியவர் முன் ஜென்மம் மற்றும் தற்போது உள்ள பாவம் புண்ணியங்களை வைத்து தான் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என்று கூறினார். இதனால்தான் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் அவர் மீது புகார் கொடுத்தனர்.

அதன் பிறகு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய தொடர்பாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பலரும் வலியுறுத்தியுள்ளது.‌ இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் மற்றொரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக மகாவிஷ்ணு கிளம்பி சென்று விட்ட நிலையில் தற்போது அவர் சென்னைக்கு வந்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை காவல்துறையினர் ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ள நிலையில் அவரிடம் சைதாப்பேட்டை காவல் உதவியாளர் ஏர்போர்ட்டில் வைத்து விசாரணை நடத்தினார். மேலும் இதைத் தொடர்ந்து தற்போது மகாவிஷ்ணுவை கைது செய்து காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.