அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாலு பகுதி உருவாகி விட்டதாக அறிவித்துள்ளனர். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும்.

இதேபோன்று வருகிற 22ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அக்டோபர் 24 இல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.