தமிழக பகுதிகளில்  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதேபோன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் அக்டோபர் 4-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.