
புகார்களுக்குள்ளான ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு முழுவதும் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடவடிக்கை பாய்கிறது. ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதால், தண்டனை வழங்கவும் முடிவு எடுக்கப்படவுள்ளது.