
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது மேலும் 15 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அதன்படி வழக்கறிஞர்களான ஹரிகரன், பொற்கொடி, சதீஷ்குமார், ஹரிதரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை, அதிமுக முன்னாள் நிர்வாகி மலர்கொடி உள்ளிட்ட 15 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.