
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள் அஞ்சலை மற்றும் மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த ரவுடி வைரமணி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே தென் மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகளுக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது