
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் சில கட்சி நிர்வாகிகள் கூட வழக்கில் சிக்கினர்.
இந்நிலையில் தற்போது கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அங்கு சென்று அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் பொற்கொடியை ஆஜர் படுத்தியுள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொற்கொடியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வருகிறது.