
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக அரசியல் கட்சியில் இருப்பவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் ஒருவரான பிரதீப் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது பெரம்பூர் பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவரை தற்போது தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் இந்த கொலை சம்பவத்திற்கு முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளார், ஆற்காடு சுரேஷின் உறவினர் ஆவார் என்று கூறப்படுகிறது. இவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.