
தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆளுருக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என்று கூறியது. அதன் பிறகு 30 முதல் 90 நாட்களுக்குள் ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்று கெடுவிதித்த நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அனுப்பிய 10 மசோதா களையும் செல்லுபடி ஆகாது என்று கூறியது.
அதோடு உச்சநீதிமன்றம் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்குவதாக தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் காரணமாக இனி ஆளுநருக்கு பதிலாக பல்கலைக்கழகங்களின் வேந்தனாக முதல்வர் இருப்பார். இதன் காரணமாக இனி பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார்.