
திருச்சியில் ஆவின் பால் விநியோகிக்கும் வேன் உரிமையாளர்கள் ஆவின் நிர்வாகம் தங்களுக்கு தரவேண்டிய வாடகை இரண்டு மாதங்களாக தரவில்லை என பணியை புறக்கணித்து போராட்டம் நடத்திவந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் அதன்படி, 55 நாட்களுக்கான வாடகை நிலுவைத் தொகை இருந்த நிலையில் வேன் உரிமையாளர்களுக்கு 15 நாட்களுக்கான தொகையை 11 மணிக்குள் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இன்று மாலை முதல் பால் விநியோகம் செய்வதாக ஆவின் பால் வேன் உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளனர். உறுதியளித்தபடி வாடகை தரவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.