இஸ்ரேலின் காஸாவில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் சுமார் 260 பேர் உயிரிழந்துள்ளனர். நெகேவ் பகுதியில் பிரமாண்ட புத்தர் சிலையின் கீழ் உற்சாகமாக நடனமாடியவர்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். கடந்த மூன்று நாட்களாக ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே வெடித்த மோதலில் பலி எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. தொடர் தாக்குதலால் காஸா நகரம் முழுவதும் பற்றி எரிகிறது.