தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து உரையாற்றி வரும் அமைச்சர் பன்னீர்செல்வம் இந்தியாவிலேயே தமிழகம் தான் வேளாண்மையில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். அதன்படி கேழ்வரகு உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்திலும், கரும்பு உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. அதன் பிறகு 30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீடு தொகை பயிர் காப்பீடு கடன் 3.58 கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.மேலும் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் வரை வழங்கப்படுகிறது என்றார்.