ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் மே 1-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

இதேபோல பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்கு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவின் படி இந்தியாவில் இருந்து அட்டாரி-வாகா எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் தங்களது தங்களது நாட்டிற்கு திரும்பி செல்ல ஆரம்பித்தனர்.