
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவினால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதன் காரணமாக சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகிறார்கள். மேலும் இவருக்கு 52 வயது ஆகும் நிலையில் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியதால் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.