
தென் மாவட்டத்தின் அரசுப் பள்ளிகளில் சமீபகாலமாகவே மாணவர்களிடையே சாதிய மோதல் நடைபெறுகிறது. இதனை தடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது. கடந்த வருடம் மாணவன் சின்னதுரை என்பவர் தாக்கப்பட்டதைபோல், இந்த வருடமும் மோதல் தொடர்கிறது.
இதனால், காவல்துறையும், கல்வித்துறையும் இணைந்து பள்ளிகளில் அமைதி குழு அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. அத்துடன், குறிப்பிட்ட பள்ளிகளில் ஆசிரியர்களை கூண்டோடு மாற்றவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.