
அமெரிக்க நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே போன்று நாங்களும் வரி விதிப்போம் என்ற டிரம்ப் கூறியிருந்தார்.
குறிப்பாக இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும் இதனால் அங்கு வியாபாரம் செய்ய முடியவில்லை எனவும் டிரம்ப் கூறியிருந்தார். இந்தியாவுடன் நல்ல நட்புறவில் இருக்கும் டொனால்ட் டிரம்ப் இந்தியா அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டி இருந்த நிலையில் தற்போது இந்தியாவுக்கு வரியை அதிகரித்துள்ளார்.
அதன்படி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதே போன்ற சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 36 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் வியட்நாமுக்கு 46 சதவீதமும், தைவானுக்கு 32 சதவீதமும் ஜப்பானுக்கு 24 சதவீதமும் பரஸ்பரதி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் டிரம்பின் இந்த புதிய வரி விதிமுறை உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.