தமிழ்நாட்டில் பெற்றோரை இழந்த சுமார் 50,000 குழந்தைகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.இதேபோன்று இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூபாய் 500 வழங்கப்படும் என்றும், பத்து மாற்று திறனாளிகளை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 2000 ரூபாய் மானிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.