
தமிழக சட்டசபையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் பெண்களை தாக்கக்கூடிய அபாயகரமான புற்று நோய்களில் ஒன்றாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்கிறது. இதனை ஆரம்பத்திலேயே தடுக்கும் விதமாக இனி 14 வயது நிரம்பிய சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
இதற்காக இந்தத் திட்டத்தில் 38 கோடி ரூபாய் வரையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே போன்ற வேட்டை பறவைகள் ஆராய்ச்சிமையத்திற்கு பறவைகளை பாதுகாப்பதற்காக ஒரு கோடி ரூபாய் வரையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.