தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் போலீசாரும் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஆறுமுக பாண்டி என்ற காவலர் சீருடைகள் பயணித்ததால் டிக்கெட் எடுக்க முடியாது என்று நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் போக்குவரத்து துறை போலீசாருக்கு எந்தவித சலுகையும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.