தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் டிசம்பர் வரை மழை நீடிக்கும். இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 7 மணி வரை 28 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் சென்னை உட்பட 28 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.