
இந்தியாவின் பிரதமராக 2 முறை இருந்தவர் மன்மோகன் சிங். இந்திய பொருளாதாரத்தை சீரமைப்பதில் இவருடைய பங்கு அளப்பரியது. இவர் உடல்நல குறைவின் காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார். நேற்று இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 11.45 மணியளவில் யமுனை நதிக்கரையில் இவருக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது. அதன்பிறகு யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங்குக்கு தனி நினைவிடம் வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது மத்திய அரசு அதனை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு டிசம்பர் 26ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மன்மோகன் சிங் மறைவை முன்னிட்டு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் அரை நாள் விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் அலுவலகங்கள், பொதுத்துறை அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.