
தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாளை தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இது அடுத்த இரு தினங்களில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக தீவுப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கடந்த இரு தினங்களாக பெய்த மழையின் காரணமாக பள்ளிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் தற்போது விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.